// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்...! திருச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்...! திருச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சித்திரைத் தேரோட்ட திருவிழா நாளை காலை வெகு விமரிசையாக நடைபெற உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி மாநகராட்சி காவல் ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் திருத்தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து நேரில் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் சிவராசு : தஞ்சாவூர் மாவட்டம் களிமேட்டில் நடந்தது போல் வேறு எங்கும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தேரோடும் வீதிகளில் முறையாக மரங்கள் களிக்கப்பட்டுள்ளதா,மின் கம்பிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதா  என்பதை எல்லாம் ஆய்வு செய்துள்ளோம்.

தஞ்சை விபத்திற்கு பின்னர் திருவிழாக்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தலைமை செயலாளர் இன்று தீயணைப்பு துறை, மாவட்ட நிர்வாகம் கலந்து கொள்ளும் மீட்டிங்க் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

Post a Comment

0 Comments