// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** 7 வயது சிறுவனை கடித்து குதறிய வெறி நாய்...! நடவடிக்கை எடுக்குமா திருச்சி மாநகராட்சி????

7 வயது சிறுவனை கடித்து குதறிய வெறி நாய்...! நடவடிக்கை எடுக்குமா திருச்சி மாநகராட்சி????

திருச்சி  உறையூர் ராமலிங்கம் நகர் தெற்கு 5 வது கிராஸ் பகுதியில் சகீரன் வசித்து வருகிறார்... அவருக்கு லுக்மா சித்திக் (7) மகன் ஆவார்.. சிறுவன் அருகிலுள்ள தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வருகிறான்...  இன்று மதியம் வீட்டின் அருகே தெரு பகுதியில் சிறுவன் விளையாடி கொண்டிருந்த போது அப்போது பகுதியில் சுற்றி திரிந்த வெறி கொண்ட  10 க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சிறுவனை கடித்து குதறியது. ..நாய் கடித்து குதறியதில் சிறுவனுக்கு உடம்பில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது...

உடனே தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்... சிறுவனுக்கு முதலுதவி செய்யப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்... நாய் கடியின் தீவிரம் மேலும் பரவாமல் இருக்க சிறுவனுக்கு தடுப்பூசி போடப்பட்டது..  7 வயது சிறுவனுக்கு நாய் கடித்த  சம்பவம் ராமலிங்க நகர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும்  பொதுமக்கள் அவரது பிள்ளைகளை வெளியே தனியாக அனுப்ப அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது..திருச்சி மாநகராட்சி மாநகர் பகுதியில் பல இடங்களில்  வெறி கொண்ட தெரு நாய்கள் சுற்றி திரிகிறது... பொது மக்களை நாய் கடிக்கும் சம்பவம் திருச்சி பல இடங்களில் அதிகளவில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது... பொதுமக்கள் சாலைகளில் நடந்து செல்ல அச்சப்படும் நிலை உள்ளது.. திருச்சி மாநகராட்சி இந்த தெரு நாய்களை பிடித்து செல்ல திருச்சி மாநகர மக்கள் கோரிக்கையாக உள்ளது.

Post a Comment

0 Comments