// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினின் உறவினர் பா.ஜ.க வில் ஜக்கியம்

திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினின் உறவினர் பா.ஜ.க வில் ஜக்கியம்

பா.ஜ.க. வர்த்தக பிரிவு திருச்சி மாவட்ட அலுவலகம் முன்பு கட்சி கொடியேற்று விழா மற்றும் மாற்று கட்சியினர் பா.ஜ.க.வில் இணையும் விழா ஆகியவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாஜக மாநில வர்த்தக அணி செயலாளர் எம். பி.முரளிதரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில வர்த்தக பிரிவு தலைவர் ராஜ கண்ணன் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்தார். 

அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் மருமகன் சபரீசனின் நெருங்கிய உறவினரான அகிலா சூரி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பகுதி இணை செயலாளர் பரமேஸ்வரன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் பாஜகவில் இணைந்தனர்.
இதில் மாவட்டத் தலைவர் ராஜசேகரன், மண்டல் தலைவர் உரையூர் தர்மராஜ் மல்லி செல்வம் வர்த்தகப் பிரிவு  சுவேந்திரன், மலைக்கோட்டை மகேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் காளீஸ்வரன் நிர்வாகிகள் , தீபக்ரங்கராஜ், தண்டபாணி, சீனிவாசன், ரமேஷ், சுரேஷ், தினகர் உள்ளிட்ட பலர் உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வர்த்தக அணி மகேஸ்வரி செய்திருந்தார்.

Post a Comment

0 Comments