// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** விசிக ஊராட்சி மன்ற தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு

விசிக ஊராட்சி மன்ற தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு

 கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஊராட்சி மன்றத் தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு; 14 பேர் மீது வழக்குப் பதிவு

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சிதம்பரம் கட்சி நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்தார்....

அப்போது அவருடன் கான்வாயில் வந்துகொண்டிருந்த பாமகவினர், கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் கமிட்டி அருகே நின்று கொண்டிருந்த ஆலப்பாக்கம் பூவாணி ஊராட்சி மன்றத் தலைவர் அருள்ஜோதியின் கார் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.


அதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. இந்த சம்பவத்தில் பாமக மாவட்ட நிர்வாகிகள் உட்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.



Post a Comment

0 Comments