// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி - காரைக்குடி முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம்

திருச்சி - காரைக்குடி முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம்

 திருச்சி-காரைக்குடி முன்பதிவு இல்லா சிறப்பு ரயில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) முதல் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

திருச்சி - காரைக்குடி சிறப்பு ரயில் (06887) மற்றும் காரைக்குடி - திருச்சி சிறப்பு ரயில் (06888) முறையே ஜூலை 18 மற்றும் ஜூலை 19 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.


ற்போது பயணிகளின் வசதிக்காக, இந்த ரயில்களை முன்கூட்டியே இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி - காரைக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் மற்றும் காரைக்குடி - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் முறையே, ஜூலை 10 மற்றும் ஜூலை 11 ஆம் தேதி முதல் இயக்கப்படும். திருச்சி - காரைக்குடி ரயில் சனிக்கிழமைகளிலும், காரைக்குடி - திருச்சி ரயில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படமாட்டாது என, தெற்கு ரயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments