// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திருச்சியில் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர் கொண்டாட்டம்

உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திருச்சியில் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர் கொண்டாட்டம்

அதிமுக ஜூலை 11 பொதுக்குழு செல்லாது எனவும், மீண்டும் பொதுக்குழு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தவு பிறப்பித்து உள்ளது.

ஜூன் 23 க்கு முன்பு இருந்த நிலையே மீண்டும் தொடர  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதன் காரணமாக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

அந்த தீர்ப்பை கொண்டாடும் வகையில் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளரான முன்னாள்  அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் தொண்டர்கள் மாலை அணிவித்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்.



 அதன் பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லம்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்..,

பேரறிஞர் அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் கட்டிக் காத்த ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கம் சதிகாரர்கள் கையில் இருந்து மீட்கப்பட்டு சுதந்திர காற்றை சுவாசிக்கும் வகையிலே இன்றைய தினம் நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இனியேனும் அவர்கள் திருந்துவார்கள், ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு மதிப்பளித்து ஒத்துழைப்பு அளிக்கும் வகையிலே ஒத்துழைப்பு இருக்கும் என்று திருச்சி மாநகர் மாவட்ட கலகம் சார்பாக நம்புகின்றோம் என கூறினார்.  

Post a Comment

0 Comments