// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் பீமநகர் ரபீக் தலைமையில் தென்காசி அருகே செங்கோட்டையில் நடைபெற்றது... இந்த கூட்டத்தில் 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் அப்பாவி பில்கீஸ் பானுவை கூட்டு பலாத்காரம் செய்த 11 கொலையாளிகளை விடுதலை செய்த மத்திய அரசை கண்டித்து கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது‌.. ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது...



அண்ணா பிறந்தநாளையொட்டி பத்து ஆண்டுகள் மேல் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம்..

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி வழியாக செல்லும் பேருந்துகளை அதிகப்படுத்த ...

மாணவிகளின் நலன் கருதி பள்ளியில் குட்டை பாவாடை நடைமுறையை தடை செய்து பாதுகாப்பான ஆடையை அணிய பள்ளி கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட கோரிக்கை வைக்கப்பட்டது..

முஸ்லீம்களின் இடஒதுக்கீடு 3.5  சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்தி வழங்கவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது...

தென்காசி, விருதுநகர்,தேனி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து செயற்குழுவில் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

Post a Comment

0 Comments