// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி செல்போன் கடையில் திருட முயற்சி

திருச்சி செல்போன் கடையில் திருட முயற்சி

திருச்சி மாநகர் பகுதியில் சமீபகாலமாக இரவு நேரங்களில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது... இரவு நேரங்களில் மர்ம நபர்கள் வீதி விதியாக சென்று ஒவ்வொரு கடை மற்றும் வீடுகளை நோட்டமிட்டு செல்கின்றனர்.. திருச்சி அமமுக தகவல் தொழில்நுட்ப திருச்சி மாவட்ட செயலாளர் குமார்  பாலக்கரை எடத்தெரு  கிருஷ்ணன் கோவில் எதிர்புறம் செல்போன் ரீசார்ஜ் மற்றும் உதிரிபாகம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்...


நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியை எடுத்து  அவரது கடையில் பூட்டை உடைத்து  கடையில் உள்ள பணம் மற்றும் பொருள்களை திருடி செல்ல முயற்சி செய்துள்ளனர்.. செல்போன் கடையில் சிசிடிவி கேமிரா இருந்ததை கண்டு பூட்டை உடைக்காமல் திருடர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர்.. இது குறித்து குமார் திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்... பூட்டை உடைக்க முயற்சி செய்த நபர்கள் யார் என்று விசாரித்து வருகின்றனர்‌‌..



இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் திருடர்கள் முக்கிய வீதிகளில் மற்றும் கடை போன்ற பகுதிகளை நோட்டமிட்டு செல்கின்றனர்... காவல்துறையினர் இரவு நேரங்களில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது..




Post a Comment

0 Comments