// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் நடந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி - நடிகை ஆண்ட்ரியா வை வரவேற்ற மொராய்ஸ் சிட்டியின் நிர்வாக இயக்குனர் ஜெ.எஸ்.எல். மொராய்ஸ், அவரது மனைவி பிரிய மொராய்ஸ்

திருச்சியில் நடந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி - நடிகை ஆண்ட்ரியா வை வரவேற்ற மொராய்ஸ் சிட்டியின் நிர்வாக இயக்குனர் ஜெ.எஸ்.எல். மொராய்ஸ், அவரது மனைவி பிரிய மொராய்ஸ்

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், திருச்சி மொராய்ஸ் சிட்டியில் திரைப்பட நடிகை ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. முன்னதாக மொராய்ஸ் சிட்டியின் நிர்வாக இயக்குனர்  ஜெ.எஸ். எல். மொராய்ஸ், இவரது மனைவியும் இயக்குனருமான பிரிய மொராய்ஸ் ஆகியோர் பாடகி ஆண்ட்ரியாவை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.


இதில், நடிகை ஆண்ட்ரியா பங்கேற்று தனது இனிமையான குரல் மூலம் சூப்பா் ஹிட் பாடல்களை இடைவிடாது பாடவுள்ளாா். போதைப் பொருளுக்கு குட் பை சொல்லுங்கள் என்ற விழிப்புணா்வு வாசகத்துடன், போதைப் பொருள்களால் ஏற்படும் தீங்குகள் பற்றிய விழிப்புணா்வுக்காக இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 


மேலும் போதை விழிப்புணர்வு தொடர்பான அமைச்சர் அன்பில்  மகேஷ் பொய்யாமொழியின்  காணொளி காட்சி இடம்பெற்றது. இந்த இசை நிகழ்ச்சியானது சா்வதேச தரத்துடன் கூடிய துல்லியமான ஒலி மற்றும் கண்களை கவரும் ஒளி அமைப்புகள் கொண்டு மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. 


திருச்சியில் முதல்முறையாக நடந்த இந்த  இந்நிகழ்ச்சியினை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Post a Comment

0 Comments