// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** மாநில அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு

மாநில அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு

திருவாரூர் வா.சோ. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் இளம் சிலம்ப வீராங்கனை மோ.பி.சுகித்தா தலைமையிலான திருச்சி உலக சிலம்ப இளையோர் சம்மேளனத்தின் சிலம்ப மாணவ மாணவிகள் கலந்து கொண்டு முகமது அயான், பால விக்னேஷ், சுவாதி மற்றும் சுகித்தா ஆகியோர் முதல் பரிசும்முகேஷ்வரன், ஜோயல், ரித்விகா சார்வி மற்றும் நிஷாந்தினி ஆகியோர் இரண்டாம் பரிசும்இஷா சார்வி, ஆஷிகா நந்தினி, மாதினி, கமலேஷ், ஜெப்ரின் மற்றும் கிஷாந்த் ஆகியோர் மூன்றாம் பரிசும் கோப்பைகளையும் வென்றனர்...






வேன் மூலமாக திருச்சி வந்த சிலம்ப வீரர்களை உலக சிலம்ப இளையோர் சம்மேளன துணைத் தலைவர் மோகன், தமிழ்நாடு சிலம்ப இளையோர் சம்மேளன தலைவர் என்.கே.ரவிசந்திரன் மற்றும் பெற்றோர்கள் வரவேற்று வாழ்த்தினார்கள்

Post a Comment

0 Comments