// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கம் சார்பில் குடியரசு தின விழா

திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கம் சார்பில் குடியரசு தின விழா

 திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கம் சார்பில் இன்று 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஶ்ரீரங்கம் பகுதியில் இயங்கி வரும் கிழக்கு ரங்கா நடுநிலைப் பள்ளியில் திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தை சிறப்பு விருந்தினராக அழைக்கப்பெற்று தேசிய கொடியேற்றப்பட்டது. 


கிழக்கு ரங்கா பள்ளி நல்லாசிரியர் விருது பெற்ற சைவ ராஜி அவர்கள் வரவேற்புரை வழங்கினார் அதன் பின்னர் திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்க மாவட்ட தலைவர் S. மஞ்சுநாத் அவர்கள் கொடி ஏற்றப்பட்டு பின்னர் சிறப்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாணவச் செல்வங்களுக்கு  இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.









விழாவின் நன்றியுரை துணைச் செயலாளர் கவுதம் கார்த்திக் அவர்கள் வழங்கினார்....

இவ்விழாவில் திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்க பொறுப்பாளர்கள் நல்லாண்டவர் தர்மர்,FLS டோமினிக் பிரான்சிஸ், அம்மன் மகேஸ்வரன்,SSR சரவணன், யுவனராஜ் , PNR மாரியப்பன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments