// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** ருத்ரன் திரைப்படம் வெளியீடு - திருச்சி ரசிகர்கள் நல திட்டங்கள் வழங்கி கொண்டாட்டம்

ருத்ரன் திரைப்படம் வெளியீடு - திருச்சி ரசிகர்கள் நல திட்டங்கள் வழங்கி கொண்டாட்டம்

 ஏப்ரல்  14 ஆம் தேதி நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் தமிழகம் முழுவதும் திரைப்படம் வெளியானது.. அதை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பல்வேறு நல திட்டங்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உதவி வந்தனர்.




இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி  சார்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று ருத்ரன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு ருத்ரன் திரைப்படம் வெற்றி பெற வேண்டி அம்மனுக்கு அர்ச்சனை செய்து  சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர்...








சிறப்பு‌ குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடுதல் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.. திரையரங்குகளில் படம் பார்க்க வந்திருக்கும் குழந்தைகளுக்கு மற்றும் பொது மக்களுக்கு மரக்கன்று கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது... இந்த நிகழ்வை திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலாம் செல்வகுமார் ஒருங்கிணைத்தார்...மன்ற நிர்வாகிகள் அனைத்து ஒத்துழைப்பு செய்து நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments