// NEWS UPDATE *** ''வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு...'' த.வெ.க உறுப்பினர் சேர்க்கைக்கான MY TVK செயலியை அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.! *** மதுரம் சுகாதாரம் கல்வி சேவா அறக்கட்டளை மற்றும் கிறிஸ்டி யூனிட்டி ஃபெடரேஷன் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரம் சுகாதாரம் கல்வி சேவா அறக்கட்டளை மற்றும் கிறிஸ்டி யூனிட்டி ஃபெடரேஷன் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மதுரம் மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கலைஞர் அறிவாலயம் எதிரில் ஒன்றிணைந்து சிறப்பாக நடந்தது.


மதுரம் மருத்துவமனை முதன்மைத் தலைவர் டாக்டர் ஐவன் மதுரம் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி அவர்கள் அனுமதித்ததின் பேரில் கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் உயர்திரு தயாளன் அவர்கள் முன்னிலையில் காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமை காவலர் இளங்கோவன்,காவலர் வினோத் ஆகியோர் பாதுகாப்புடன் மெகா போன் மூலமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.


கரூர் பைபாஸ் ரோடு கலைஞர் அறிவாலயம் சிக்னல் அருகே ஐந்து முனைகளிலும் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.



மேற்படி நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஓவியர் கஸ்பார் அவர்கள்,  தகவல் தளம்/ சீயோன் செய்தி ஒளிபரப்பாளரும் CUF. P.R.O Blood Sam,CUF உதவி தலைவர் Key Board ஜோஸ்வா, CUF துணைச் செயலாளர் சகோதரர்  இளையராஜா மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமதி ஷீலா செலஸ் அவர்கள், திருமதி ரூபினி, சிந்தாமணி ரவி,நோட்டரி பப்ளிக் லியோராஜ், அய்யனார் மெட்டல் சுரேஷ்,எஸ்.சுபக்குமார் ஏலீம் சபை திருமதி ஜாக்குலின், CUF ஆலோசகர் A. ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரச்சாரம்  வழங்கினர்.





மேற்படி நிகழ்ச்சியை மாநில ஒருங்கிணைப்பாளர் ஓவியர் கஸ்பார் அவர்கள் காவல்துறையினரை சந்தித்து முன் அனுமதி வாங்கிய படி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மேற்படி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் காவல்

துறையினருக்கும்  முதன்மைத் தலைவர் டாக்டர் ஐவன் மதுரம் அவர்கள் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments