// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை அவசர ஆலோசனை கூட்டம்

திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை அவசர ஆலோசனை கூட்டம்

மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டத்திற்கு  பல்வேறு அரசியல் கட்சியினர் இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


பொது சிவில் சட்டம் தொடர்பாக திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் அவசர ஆலோசனை கூட்டம் மெளலானா முஃப்தி முஹம்மது ரூஹுல் ஹக் ரஷாதி காஸிமி ஹழ்ரத் கிப்லா தலைமையில் தென்னூர் ஜெனரல் பஜார் பள்ளிவாசலில் நடைபெற்றது.


இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால்  சட்ட ரீதியாக எதிர் கொள்வது எப்படி என ஆலோசனை செய்யப்பட்டது.. முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

இந்த கூட்டத்தில் மிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் பொருளாளர் மெளலானா S.முஹம்மது மீரான் மிஸ்பாஹி ஹழ்ரத் அவர்கள்,

 திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர் மெளலானா N.S இன்ஆமுல் ஹஸன் காஷிஃபி ஹழ்ரத் அவர்கள்,

திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் பொருளாளர் மெளலானா M. அல்அமீன் யூசுஃபி அவர்கள் மற்றும் திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் செயற்குழு உலமாக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments