// NEWS UPDATE *** ''வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு...'' த.வெ.க உறுப்பினர் சேர்க்கைக்கான MY TVK செயலியை அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.! *** பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் சிமெண்ட் கம்பெனியை அகற்ற கோரி SDPI கட்சி மனு

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் சிமெண்ட் கம்பெனியை அகற்ற கோரி SDPI கட்சி மனு

 SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி 37 வது வார்டு காந்திஜி தெரு,ஹரணி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாகவும்,மேலும் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மற்றும் சாலைகளை சேதப்படுத்தும் வகையிலும் அப்பகுதியில் இயங்கி வரும் சிமெண்ட் கல் மற்றும் காம்பவுண்ட் கல் தயாரிக்கும் கம்பெனியை அப்பகுதியில் இருந்து அகற்றி தருமாறு SDPI கட்சி 37-வது வார்டு கிளை நிர்வாகிகள்  கோரிக்கை மனு வைத்தனர்.


அதன் அடிப்படையில் இன்று SDPI கட்சி நிர்வாகமும், அப்பகுதி குடியிருப்பு மக்களின் சார்பாகவும் கோட்டம் (3) உதவி ஆணையர் அவர்களிடம் புகார் மனுவை  கிளை துணைத் தலைவர் ஹவுஸ் பாஷா தலைமையில் கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திருவெறும்பூர் தொகுதி தலைவர் அப்பாஸ் மந்திரி 37 வது வார்டு கிளை பொருளாளர் பஷீர் அகமது மற்றும் ஹரிணி நகர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்


இம்மனுவை பெற்றுக் கொண்ட உதவி ஆணையர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

மேலும் துவாக்குடி பகுதியில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு பரிந்துரை செய்வதாகவும் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments