// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் திரளான மக்கள் பங்கேற்க அழைப்பு

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் திரளான மக்கள் பங்கேற்க அழைப்பு

திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் KMK.ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் பாலக்கரையில் நடைபெற்றது. கூட்டமைப்பின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருகின்ற 27/10/ 2023 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி அளவில், இஸ்ரேலில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் அதிகமான மக்களை பங்கேற்க செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.





ராமகிருஷ்ணா பாலம் அருகில் பேரணி தொடங்கி பாலக்கரை ரவுண்டானா அருகில் நிறைவு பெற்று பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும், இதில் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த ஆண்கள்,பெண்கள் குழந்தைகள் என பெருந்திரளானோர் பங்கேற்க வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.





இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ கட்சி,தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, ஏகத்துவ முஸ்லிம் ஜமாத், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம், வஹ்ததே இஸ்லாமி ஹிந்த், JAQH, அகில இந்திய முஸ்லிம் லீக், ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments