// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விஜயகாந்த்க்கு புகழஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விஜயகாந்த்க்கு புகழஞ்சலி

 தேசிய முற்போக்கு திராவிடர் கழக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு திருச்சி மாநகர் 23 வது வார்டு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புகழஞ்சலி 

தேசிய முற்போக்கு  திராவிடர் கழக தலைவர் விஜயகாந்த் அவர்கள் மறைவையொட்டி திருச்சி மாநகர் உறையூர் 23 வது வார்டு பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் தலைமையில் மலர் தூவி மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினர். 


இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் S.சிவா, மேற்கு பகுதி செயலாளர் இரா. சுரேஷ் முத்துசாமி துணைச் செயலாளர் க.இப்ராஹிம், பொருளாளர் ரவீந்திரன், பகுதி குழு உறுப்பினர்கள் ஆனந்தன் தில்லை நாகராஜ், சரண்சிங், பாட்ஷா, மௌலானா, வை. புஷ்பம், ம.சுமதி, ராஜேஸ்வரி, சுலோச்சனா, ஜெய்லானி, தர்மா, ராஜ், மாணிக்கம், ஆட்டோ மனோகர், ஆட்டோ பக்கிரிசாமி, ஆட்டோ பெருமாள் மற்றும் பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments