// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** பழனி பாபா நினைவு நாளையொட்டி பார்வை திறன் குறைபாடு மாணவிகளுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

பழனி பாபா நினைவு நாளையொட்டி பார்வை திறன் குறைபாடு மாணவிகளுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

 பழனி பாபாவின் நினைவு நாளான இன்று பார்வைத் திறன் குறைபாடு உள்ள திருச்சி புத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது...


பழனிபாபா அவர்களின் நினைவு நாளான இன்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தொழிற்சங்கமான மக்கள் ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் சார்பாக பார்வைத் திறன் குறைபாடு உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு இன்றைய தினம் காலை உணவு வழங்கப்பட்டது..


தொழிற்சங்க மாவட்ட செயலாளர் டேவிட் ஆரோக்கியராஜ் அவர்கள் தலைமையிலும் ஆட்டோ தொழில் சங்க மாவட்ட செயலாளர் பாலக்கரை ஜாகீர் ஷெரீப் ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் சரவணன் ஆகியோரது முன்னிலையிலும் இன்று மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது



தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அவர்கள் உணவு வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்..



உடன் மாவட்ட துணை செயலாளர் முஹம்மது தாஹா ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் ராம்குமார் ஆட்டோ தொழிற்சங்க பாலக்கரை பகுதி செயலாளர் சேட்டு ஜங்ஷன் பகுதி செயலாளர் ஷாஜகான் உள்ளிட்ட தோழர்களுடன் இருந்தனர்.


மாணவிகளின் பசியாற்றும் உன்னதமான நிகழ்வினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அவர்கள் தெரிவித்துக் கொண்டார்கள்.

Post a Comment

0 Comments