// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் மீன் மற்றும் இறைச்சி அங்காடி திறப்பு

திருச்சியில் மீன் மற்றும் இறைச்சி அங்காடி திறப்பு

 திருச்சியில் 13.49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் மற்றும் இறைச்சி அங்காடி வணிக வளாகத்தை அமைச்சர்கள் கே என் நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்


 நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் தகே.என்.நேரு மற்றும்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  ஆகியோர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட் கீழரண் சாலை பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூபாய் 13.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் மற்றும் இறைச்சி அங்காடி வணிக வளாகத்தை இன்று (08.02.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். 


இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்.இ.ஆ.ப.  மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் இரா.வைத்திநாதன். துணை மேயர் ஜி.திவ்யா, நகர பொறியாளர் பி.சிவபாதம், மண்டல தலைவர்கள் மதிவாணன், ஜெயநிர்மலா, மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments