// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் பெண்ணிடம் ரூ.28 லட்சம் மோசடி

திருச்சியில் பெண்ணிடம் ரூ.28 லட்சம் மோசடி

 திருச்சி அரியமங்கலத்தில் பெண்ணிடம் ரூ.28 லட்சம் மோசடி‌ மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

திருச்சி அரியமங்கலம் காமராஜ நகர் கருணாநிதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சீரின் பானு. இவர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார்மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;..


எனது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்தார். இந்த நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு எனது அத்தை மற்றும் கணவரை நம்பி மகளிர் சுய உதவி குழு மற்றும் தனியாக பல பேரிடம் ரூ. 28 லட்சத்து 98 ஆயி ரம் பணத்தை நான் கடனாக பெற்று மணப்பாறையில் உள்ள ஒருவருக்கு கடனாக கொடுத்தேன்.அதன்‌ பின்னர் பணத்தை வாங்கிய அவர் எங்களை ஏமாற்றி விட்டார்.

இந்த நிலையில் எனது கணவரும் வெளிநாட்டில் இருந்து திரும்ப வேலையில்லாமல் வந்து விட்டார். இதனால் பணத்தை கொடுத்தவர்கள் பணம் கேட்டு எங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். ஆகவே சம்பந்தப்பட்டவர் களிடமிருந்து பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு கேட் டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர். மேலும் நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரித்ததில் எதிர் தரப்பினருக்கும் மனு அளித்தவருக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது அவர்களின் குடும்ப பிரச்சனை மற்றும் காழ்ப்புணர்ச்சியால் மனு அளிக்கப்பட்டது 

Post a Comment

0 Comments