// NEWS UPDATE *** ''வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு...'' த.வெ.க உறுப்பினர் சேர்க்கைக்கான MY TVK செயலியை அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.! *** முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா

கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 654 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவினை குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் வழங்கினார்.


முன்னாள் முதல்வர் டாக்டர். கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஒரு இலட்சம் விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கும் விதமாக, கரூர் மாவட்டத்தில் குளித்தலை அண்ணா திருமண மண்டபத்தில் வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வைகநல்லூர் மற்றும் கழுகூர் ஊராட்சியை சேர்ந்த 654 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவினை குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் வழங்கினார்.




இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்வில் குளித்தலை கோட்டாட்சியர் ரவி, குளித்தலை வட்டாட்சியர் சுரேஷ், குளித்தலை நகர மன்ற தலைவர் சகுந்தலா, துணைத் தலைவர் கணேசன், திமுக மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவி ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் சிவராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாபருல்லா, நகர அவை தலைவர் சாகுல் அமீது, பொருளாளர் தமிழரசன் ,வார்டு கவுன்சிலர்கள், திமுக கட்சிநிர்வாகிகளும்பொதுமக்களும் கலந்துகொண்டனர்.


கரூர் நிருபர் குமரவேல் 

Post a Comment

0 Comments