// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் பாரிவேந்தர் பச்சமுத்து வேட்பு மனு தாக்கல்

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் பாரிவேந்தர் பச்சமுத்து வேட்பு மனு தாக்கல்

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பாக வேட்பாளராக போட்டியிடும் பாரிவேந்தர் பச்சமுத்து மாவட்ட தேர்தல் அலுவலர் கற்பகத்திடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.


தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக்கூடிய இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் பச்சமுத்து கடந்த முறை நடைபெற்ற முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும் வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பல்வேறு நலத்திட்டங்களை தொகுதிக்கு செய்துள்ளார்..


குறிப்பாக பள்ளி கல்லூரிக்கு இலவசமாக புத்தகங்கள் ஷேர் பென்ச் போன்ற அத்தியாவசிய பொருட்களும் அதே போன்று பெரம்பலூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிறுவாச்சூர் மேம்பாலம் அமைத்தால் சாலை விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார் ஆகையால் வருகின்ற தேர்தலில் மாபெரும் வாக்கு விசாரித்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக  கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர் இந்த முறை தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments