// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா அறிமுக கூட்டம்

திருச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா அறிமுக கூட்டம்

 திருச்சி மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் ப. கருப்பையாவை,  முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான சி.விஜயபாஸ்கா் அறிமுகம் செய்துவைத்துப் பேசினாா். புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற செயல்வீரா்கள் கூட்டத்தில் அவா் பேசியது: திருச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக துடிப்பான இளைஞா், புதுக்கோட்டை மண்ணின் மைந்தா் ப. கருப்பையா நிறுத்தப்பட்டுள்ளாா். இந்தத் தொகுதியில் இலை துளிா்க்கப் போகிறது.



அதில் எந்த மாற்றமும் இல்லை. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா். கூட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் காா்த்திக் தொண்டைமான், நகர அதிமுக செயலா்கள் க. பாஸ்கா், அப்துல்ரகுமான் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகளும், தேமுதிக, எஸ்டிபிஐ கட்சியின் நிா்வாகிகளும் கலந்து கொண்டனா். கூட்டத்தில் வேட்பாளா் ப. கருப்பையா கலந்து கொண்டு வாக்குசேகரித்துப் பேசினாா்.


Post a Comment

0 Comments