// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி தொகுதி புதுக்கோட்டையில் அதிமுக வேட்பாளர் கருப்பையா சூறாவளி பிரச்சாரம்

திருச்சி தொகுதி புதுக்கோட்டையில் அதிமுக வேட்பாளர் கருப்பையா சூறாவளி பிரச்சாரம்

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா மற்றும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  ஆகியோர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கோயில் முன்பாக மலர் கடைகள் அமைத்திருந்த பெண்களிடமும் வேட்பாளர் கருப்பையா வாக்குகள் சேகரித்தார். இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை நகர் பகுதிகளான அடப்பன் வயல், வடக்கு 3ஆம் விதி, வடக்கு நான்காம் விதி,  வ உ சி நகர்,


பாலன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில்  இரட்டை இலை சின்னத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வேட்பாளர் கருப்பையா ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்..



 வேட்பாளர் கருப்பையாவிற்கு பெண்கள் ஆராத்தி எடுத்து  உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments