NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த கோரி துண்டறிக்கை வழங்கல்

எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த கோரி துண்டறிக்கை வழங்கல்

 SDPI கட்சி,திருச்சி தெற்கு மாவட்டம் மேற்கு தொகுதி பீம நகர் கிளையின் சார்பாக தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த கோரி  மாபெரும்  விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கும் பிரச்சாரம் கிளை தலைவர் கே.ஆர்.எம். ஆஜிப் தலைமையில் நடைபெற்றது. 

இப்பிரச்சாரத்திற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் K.தமீம் அன்சாரி அவர்கள் கலந்துக் கொண்டு நோட்டீஸ் வழங்கும் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். 


இந்நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் முகமது சித்திக், மாவட்ட செயலாளர் தளபதி அப்பாஸ்,மாவட்ட பொருளாளர் நியாமத்துல்லா,





மாவட்ட செய்தி தொடர்பாளர்  Dr.S.பக்ருதீன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பொன்னகர் ரபீக்,K.முபாரக் அலி,மேற்கு தொகுதி தலைவர் சிராஜ், தொகுதி செயலாளர்கள் சையது முஸ்தபா,K.முஹம்மது சலீம்,வர்த்தக அணி மாவட்ட தலைவர் சபியுல்லா, அப்பாஸ்  மற்றும் பீமநகர் கிளை நிர்வாகிகள்  ஆகியோர்கள் கலந்து கொண்டு நோட்டிஸ் பிரச்சாரத்தை பீம நகர் பகுதி முழுவதும் செய்தனர்.

Post a Comment

0 Comments