// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் "நெஞ்சாத்தியே" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் "நெஞ்சாத்தியே" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

 சென்னை கோயம்பேட்டில் உள்ள பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில் "நெஞ்சாத்தியே"  திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பிரபல திரைப்பட நடிகர் மீசை ராஜேந்திரன் அவர்கள் ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் சிவா அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு சிறப்பித்தனர்.


சேலம் அஸ்வந்த் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிப்பில் M. K. குமரேசன் அவர்கள் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள  திரைப்படம் "நெஞ்சாத்தியே"  இந்த படத்தில் பிரபல திரைப்பட நடிகைகள் மதுமிதா ஆலிசா தாரணி சுமதி நேகா ஜேசுவால்  மற்றும் நடிகைகள் சாந்தி காஞ்சனா  ராதா பவித்ரா தர்ஷினி  உள்ளிட்டோரும் நடிகர்கள் மணிமாறன்  டிராகன் கண்ணன் கருப்பசாமி ராமன் ஜேம்ஸ் சுப்பிரமணி ரவிசந்திரன் கோபால் அஸ்வந்த் யுவா சிவாஞ்சி அருண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.




இவர்களுடன் தேசிய மற்றும் மாநில விருது பெற்ற குறும்படத்தின்  இயக்குனரும் நடிகருமான திருச்சி ஆர். ஏ. தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்..






இப்படத்தின் ஒளிப்பதிவாளராக வெற்றி இணை ஒளிப்பதிவாளர்களாக சம்பத் குமார் விக்கி அஜித் சதிஷ் உள்ளிடோரும்  இசை செந்தமிழ் & ஜீவன்மயில் உள்ளிட்டோரும்  பாடல் வரிகளை கவி கார்கோ மற்றும் செல்வராஜா உள்ளிட்டோரும் எடிட்டிங் VFX & CG கலரிங் பணிகளை ரோகித் அவர்களும்




சண்டை பயிற்சியை ஸ்டன்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா அவர்களும்  நடனம்  பவர் சிவா மாஸ்டர் அவர்களும் ஒப்பனை ஹரி அவர்களும் பிண்ணனி இசையை மோகன்லால் துனை இயக்குனர்களாக தினேஷ் செளந்தர் மகேஸ்வரன் குமரவேலும்  பாடல்களை பாடகர்கள் ஸ்ரீகாந்த் ஹரிஹரன் குரு ஆகியோர் பாடியுள்ளனர் நெஞ்சாத்தியே திரைப்படம்  விரைவில் திரையரங்குகளில் வெளியிடுவதற்க்காக இறுதி கட்ட தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது..




இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசியுடன்  தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments