// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** திருச்சி அரசங்குடி பகுதியில் குடியிருக்கும் இடமான நத்தம் மனைகளுக்கு பட்டா வழங்க கோரி அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஆட்சித் தலைவரிடம் மனு

திருச்சி அரசங்குடி பகுதியில் குடியிருக்கும் இடமான நத்தம் மனைகளுக்கு பட்டா வழங்க கோரி அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஆட்சித் தலைவரிடம் மனு

திருச்சி அரசங்குடி பகுதியில் குடியிருக்கும் இடமான நத்தம் மனைகளுக்கு பட்டா வழங்க கோரி அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்


திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுக்கா, அரசங்குடி கிராமம், மேலத்தெரு பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் தமிழக விடுதலைக் கழகத்தின் நிர்வாகி வழக்கறிஞர் வேங்கை ராஜா தலைமையில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-


திருச்சி திருவெறும்பூர் அரசங்குடி கிராமம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக தலைமுறை தலைமுறையாக இப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மேலும் இந்த இடம் நத்தம்  மனைகள் என்பதால் பலமுறை மனு அளித்தும் அரசு அதிகாரிகள் எங்களுக்கு பட்டா வழங்காமல் இருந்து வருகின்றனர் மேலும் இந்த பகுதியை சேர்ந்த ஒரு சிலர் இந்த நத்தம் மனைகளை ஆக்கிரமித்து கிரயம் செய்து தருவதாக கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு  அரசினால் வழங்கப்படும் தொகுப்பு வீடு கட்ட எழுதிக் கொடுத்த மக்களை ஏமாற்றி வருகின்றனர். 

 


எனவே ஏழை எளிய மக்களின் குடியிருப்பினை மீட்டு தருமாறும் அவரவர் குடியிருக்கும் வீடுகளுக்கும் மற்றும் குடியிருந்து வந்தவர்களை அதிகார துஷ் பிரயோகத்தால் காலி செய்யப்பட்டுள்ள நத்தம் குடியிருப்பினை அடங்கல் பதிவேட்டில் உள்ளவாறு மீண்டும் அவர்களுக்கே வழங்கிடவும் தொகுப்பு வீடுகள் கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து ஆய்வு செய்து எங்கள் மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டுமென அரசங்குடி கிராம பொதுமக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments