// NEWS UPDATE *** ''வேறு எங்கும் கிளைகள் கிடையாது...'' தைலாபுரத்தில் தான் தலைமை அலுவலகம் - ராமதாஸ் புதிய அறிவிப்பு *** மாணவர் இந்தியா அமைப்பின் சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது

மாணவர் இந்தியா அமைப்பின் சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது

 மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியன்று மாணவர் இந்தியா சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு  வருகிறது. அன்றைய தினம் மாணவர் இந்தியா சார்பில்  பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் நடைபெறும். 


அந்த வகையில் காந்தி நினைவு தினமான நேற்று திருச்சி பால்பண்ணை அருகே காந்தி படுகொலை பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. 


இந்நிகழ்விற்கு  மாணவர் இந்தியா தலைவர் சிதம்பரம் பைசல் தலைமை வகித்தார். 


மாணவர் இந்தியா மாநில ஊடக பிரிவு செயலாளர் அஷ்ரப் ஒலி வரவேற்புரை வழஙகினார். பாபர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் பேராசிரியர் ஆலிமா பாத்திமா, நூர் முஹம்மது மற்றும்  திருச்சி அதாயி அரபிக் கல்லூரி முதல்வர் மௌலவி முகமது பைஜுல் பாரி ஆலிம் பிலாலி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.


நிகழ்வில் கொங்கு இளைஞர் பேரவை  தலைவர் தனியரசு கலந்து கொண்டு,  காந்தியின் சகிப்புத்தன்மையையும், தற்போது இந்தியாவில் சிறுபான்மையினருக்கு   நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும் உரையாற்றினார். 


தொடர்ந்து சமூக ஆர்வலரும், முன்னாள் ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டாளருமான‌ சத்திய பிரபு பேசுகையில்.... ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பயணித்த போது காந்தி கொலையை ஒருபோதும் அவர்கள் வருத்தமான செய்தியாக பதிவு செய்ததில்லை எனவும்,  கோட்சே காந்தியை கொலை செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்  சாவர்க்கரை சந்தித்தது குறித்தும், காந்தி கொலைக்கு பின்னால் உள்ள சதிவலைகளை அம்பலப்படுத்தி பேசினார். 

தொடர்ந்து மஜக மாநில துணை செயலாளர் அரிமா அஸாருதீன் பேசுகையில் ....காந்தி கொலைக்கு காரணமானவர்களை தியாகிகளாக்கும் போக்கினை மாற்றவும், காந்தியின் படுகொலைக்கு பின்னால் உள்ள சதியினை ஒவ்வொரு தலைமுறையினருக்கும் எடுத்து செல்லும் வகையிலும் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி  இந்நிகழ்வினை மாணவர் இந்தியா மூலம் நடத்துகிறார் என்றார். மேலும் 2019 ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கில் தலைவர் பேசுகையில், இந்தியாவில் நடந்த காந்தி கொலை, பொற்கோவில் தாக்குதல், பாபர் மசூதி இடிப்பு, கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் உயிரோடு எரித்த சம்பவங்கள் ஆகியவை  பயங்கரவாத செயல்கள் என்று பேசியதை குறிப்பிட்டு கருத்தரங்கத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தினார்.


மஜக மாநில இளைஞரணி செயலாளர் திருச்சி ஷரீஃப், காந்தியின் தேசத்தில் தற்போது மாணவர்களும், இளைஞர்களும் போதைக்கு அடிமை ஆகுவதை தடுக்க வேண்டும் என்றார்

முன்னதாக மாநில செயலாளர் வல்லம் கபீர், மாநில இளைஞரணி செயலாளர் திருச்சி ஷரீஃப் மற்றும் மாவட்ட செயலாளர் பாபு பாய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு கேடயம் வழங்கினர். இறுதியாக மாணவர் இந்தியா திருச்சி மாவட்ட செயலாளர் ரபீக் நன்றி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments