// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** மனிதநேய ஜனநாயக திருச்சி மாவட்ட இளைஞர் அணி மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

மனிதநேய ஜனநாயக திருச்சி மாவட்ட இளைஞர் அணி மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி வழிகாட்டுதல் படி மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி மாவட்ட இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் யாசர் ஷெரிப் அவர்கள் தலைமையில், மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் @ பாபு , இளைஞர் அணி பொருளாளர் ஹம்ருதீன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட அலுவலகத்தில்  நடைபெற்றது. 


இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி M.முஹமது ஷரிப் M.com, M.phil அவர்கள் கலந்து கொண்டு இளைஞர் அணியின் அவசியம், கட்டமைப்பின் முக்கியத்துவம் மற்றும் செயலாற்ற வேண்டிய நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்.


அதனைத் தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. 


இந்த கூட்டத்தில் இளைஞர் அணி சார்பில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம், அரசியல் பயிலரங்கம், மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இந்த கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் தர்வேஷ், அஸ்பாக், இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர்கள் சாகுல் ஹமீத், சதாம் உசேன், முஹம்மத், அசார், சாதிக் மற்றும்  மாவட்ட நிர்வாகிகள் பஷாரத் நியாஸ்,ஷேக், ஜாக்கீர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments