NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாமல், வங்கி ஊழியர்களை பழிவாங்கும் வங்கி நிர்வாகத்தை கண்டித்து மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் இரவில் தர்ணா போராட்டம்.

12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாமல், வங்கி ஊழியர்களை பழிவாங்கும் வங்கி நிர்வாகத்தை கண்டித்து மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் இரவில் தர்ணா போராட்டம்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்றைய தினம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் இரவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பதவிஉயர்வுக்கு ஏற்ப வருடாந்திர சம்பள உயர்வு வழங்கப்படாததை கண்டித்தும், 15 வருடம் பணிமுடித்த தட்டச்சர்களுக்கு சிறப்பு கிரேடு வழங்காமலும், வங்கி ஊழியர்களுக்கான சலுகைகளை பறிக்கும் விதமாகவும், வங்கி ஊழியர்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை பரப்பும் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் செயல்பட்டு வருவதை கண்டித்து 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மத்திய கூட்டுறவு வங்கி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.


வங்கி பணியாளர்களின் கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் நிறைவேற்றுவேன் என உத்தரவாதம்அளித்துவிட்டு 20 நாட்களாகியும் நிறைவேற்றாமல், இன்றைய தினம் போராட்டம் நடத்துவதுகுறித்து கடிதம்கொடுத்தமைக்காக, அதிகாரத்தை துஷ்பிரயோகம்செய்து, இரண்டு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளை 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் பணியிடமாற்றம்செய்து வங்கி ஊழியர்களை அச்சுறுத்தும்விதமாக செயல்படுவதைக்கண்டித்தும், வங்கிஊழியர்களின் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றவலியுறுத்தியும் இன்றையதினம் இரவு மத்திய கூட்டுறவுவங்கி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் 150 க்கும் மேற்பட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பங்கேற்று வங்கி மேலாண்மை இயக்குனரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தமிழக அரசு மற்றும் மாநில கூட்டுறவு பதிவாளர் தலையிட்டு மேலாண்மை இயக்குனரை பணிமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அடுத்தகட்டமாக வங்கியில் நடைபெறும் அனைத்து கூட்டங்களையும் புறக்கணிப்பது என்றும், கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபடுவது என்றும், மே 14 ஆம் தேதி அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அரசுக்கும் கூட்டுறவுதுறைக்கும் எச்சரிக்கை விடுத்தனர்.




Post a Comment

0 Comments