NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** இரண்டு தூணில் ஒரு குட்டி நாடு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

இரண்டு தூணில் ஒரு குட்டி நாடு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சி குழுமணி, ஆர்ய வைசிய சமூகத்தினர் நலச்சங்கம் ஆருத்ரா சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து  இரண்டு தூணில் ஒரு குட்டி நாடு நாணயம் குறித்து சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி குழுமணி பகுதியில் தனியார் பள்ளியில் நடைபெற்றது. 

திருச்சி குழுமணி, ஆர்ய வைசிய சமூகத்தினர் நலச்சங்கம் ஆருத்ரா சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார் . செயலர் முருகானந்தம் வரவேற்றார்.
துணைத் தலைவர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மற்றும் வரலாற்று ஆர்வலர்க் குழு நிறுவனர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
 சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் இரண்டு தூணில் ஒரு குட்டி நாடு நாணயம் குறித்து பேசுகையில்....

சீலாந்து  அங்கீகரிக்கப்படாத பிரதேசம் ஆகும். இது ஐக்கிய இராச்சியம், இங்கிலாந்தின் சஃபோக் கரையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் வடகடலில் உள்ள ஒரு முன்னாள் இரண்டாம் உலகப் போர்க்கால மவுன்செல் கடல் துறைகளில் ஒன்றாகும்.1967 முதல் பாடி ரோய் பேட்சு என்பவராலும், அவரது குடும்பத்தினராலும் இப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு சுதந்திரத் தனிநாடாகக் கோரப்பட்டது.




பேட்சு 1967 ஆம் ஆண்டில் தனது தனிப்பட்ட வானொலி நிலையம் ஒன்றை நிறுவும் நோக்கோடு கடற்கொள்ளைக்கார வானொலி ஒலிபரப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றினார். 1975 ஆம் ஆண்டில்  சீலாந்து என்ற பெயரில் அரசு ஒன்றை நிறுவி அரசியலமைப்புச் சட்டம், மற்றும் பல தேசிய சின்னங்களையும் அமைத்தார். பேட்சு முதுமை அடைந்த நிலையில், ஆட்சிப் பொறுப்பைத் தனது மகன் மைக்கேலிடம் கொடுத்துவிட்டு இங்கிலாந்தின் எசெக்சு நகருக்குத் திரும்பினார். பேட்சு 2012 ஆம் ஆண்டில் தனது 91வது அகவையில் மரணமானார்.



சீலாந்து உலகின் மிகச் சிறிய நாடாக, அல்லது நுண் நாடாகக் கருதப்பட்டாலும், இது எந்தவொரு சுதந்திர நாடாலும் இதுவரையில் அங்கீகரிக்கப்படவில்லை. அப்போது வழக்கில் இருந்த பிராந்திய கடல் எல்லைக் கட்டுப்பாட்டின் படி, இப்பிரதேசத்தின் மீது உரிமை கோர இங்கிலாந்துக்கு அதிகாரம் இல்லை என இங்கிலாந்தின் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், ஐக்கிய இராச்சியம், மற்றும் செருமனி ஆகியன நடைமுறைப்படி தம்மை அங்கீகரித்துள்ளதாக சீலாந்து அரசு கூறி வருகிறது.


கடலில் இரண்டு தூண் மீது அமைந்துள்ள ஒரு கட்டமைப்பே இந்நாட்டு மக்களின் வாழிடமாகும். இக்கட்டிடத்தில் 30 அறைகள் உள்ளன. இந்நாட்டினை தற்போது ஆண்டு வரும் மைக்கேல் குடும்பம் உட்பட சில குடிமக்களே இந்நாட்டில் வசித்து வருகின்றனர்.சிறிய நுண் நாடாக அறிவித்த  சீலாண்ட் பல நாணயங்கள் மற்றும் அஞ்சல்தலைகளை வெளியிட்டுள்ளது . இந்த நாணயங்களிலும் அஞ்சல்தலைகளிலும்
"சீலாண்ட் டாலர்கள்"  ஆக குறிப்பிடப்பட்டுள்ளன. சீலாண்ட் நாணயங்கள் எங்கும் புழக்கத்தில் இல்லாததால், எந்த நாட்டாலும் நாணயமாக ஏற்றுக்கொள்ளாத சூழலே உள்ளது என்றார். நிறைவாக பொருளாளர் பாபு நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments