NEWS UPDATE *** “அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்க கூடாது” இந்திய தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு *** ராஜ்யசபா உறுப்பினர் பதவி பார்க்கவ குலத்துக்கு ஒதுக்க அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் ன் தலைவர் திருமலை எம் ரவி கோரிக்கை

ராஜ்யசபா உறுப்பினர் பதவி பார்க்கவ குலத்துக்கு ஒதுக்க அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் ன் தலைவர் திருமலை எம் ரவி கோரிக்கை

 தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6  மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு ஜூன் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது..புதிதாக மாநிலங்களவைக்கு நடைபெறும் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நான்கு எம்பிக்கள் அஇஅதிமுக சார்பில் இரண்டு எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.இந்த நிலையில் பார்க்கவ குல சமுதாயத்தை சேர்ந்த இருவருக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எண்பது லட்சம் மக்கள் தொகை கொண்ட பார்க்கவ குல சமுதாயம் எதிர்பார்க்கிறது 





அதில் திமுக சார்பில் இந்த மண்ணுக்காக தன் இன்னுயிரை நீத்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மாவீரன் ரூசோ அவர்களின் மனைவியார் திருமதி ஜோன்ஸ் ரூசோ அவர்களுக்கும்,அஇஅதிமுக சார்பில் பாஜக கூட்டணியில் உள்ள IJK நிறுவனர் பாரிவேந்தர் அவர்களுக்கு,அஇஅதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த குமரகுரு அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் .மேலும் பார்க்கவ குலத்தின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் மாநில அமைச்சரவையில் ஒருவருக்கு இடம் வழங்க வேண்டும் 

ஆர் பி ஐ ல் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நகைக் கடன் சார்ந்த கெடுபிடிகள்  ஏழை எளிய மக்கள் விவசாயிகள் சிறு குறு தொழில் முனைவோர்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக திரும்பப் பெற வழிவகை செய்ய வேண்டும் என்று தன் அறிக்கையில் அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் ன் தலைவர் திரு திருமலை எம் ரவி பார்க்கவன் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments