NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** மத்திய அரசு கொண்டுவந்த வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமுமுக சார்பில் பேரணி மற்றும் பிஎஸ்என்எல் அலுவலக முற்றுகைப் போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்த வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமுமுக சார்பில் பேரணி மற்றும் பிஎஸ்என்எல் அலுவலக முற்றுகைப் போராட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மண்டலம் சார்பில் மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்தை கண்டித்து  பேரணியாக புறப்பட்டு திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு மமக பொது செயலாளர் அப்துல் சமது  போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.


மமக துணை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா கண்டன கோஷம் எழுப்பி பேரணியை துவக்கி வைத்தார்.


போராட்டத்தில் தமுமுக மாநில பொருளாளர் ஷபியுல்லாஹ் கான், திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC, கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா, புதுகோட்டை மாவட்ட தலைவர் அப்துல் கனி, கரூர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது MC, பெரம்பலூர் மாவட்ட தலைவர் குதரதுல்லாஹ், அரியலூர் மாவட்ட தலைவர் சாகுல், மகளீர் பேரவை மாநில பொருளாளர் ஷான் ராணி ஆலிமா, தலைமை பிரதிநிதி வழ. நூர்தீன், தாஹீர் பாஷா, சுல்தான், ஐபிபி மாநில துணை செயலாளர் முகமது ரபிக்க, ஐடி விங் மாநில துணை செயலாளர் நஜீர், தலைமை செயற்குழு உறுப்பினர் சபிர், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.


வக்ஃபு வாரியங்களை முடக்கி வக்ஃபு சொத்துகளை ஆக்கிரமிக்க வழி வகுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான பாரபட்சமான விதிகளைக் கொண்டிருக்கும் வக்ஃபு திருத்த மசோதா 2024ஐ முஸ்லிம்களும், மதசார்பற்ற கட்சிகளும் கடுமையாக எதிர்ப்போம்.


இந்த மசோதா அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அளித்துள்ள பல உரிமைகளை பறிக்கும் வகையிலும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை பாரபட்சமாக கருதும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ள ஒன்றிய அரசை கண்டித்தும், இத்திருத்த சட்டத்தை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் முற்றுகை போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பபட்டன.இப்போராட்டத்தில் திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளார்கள் இப்ராஹிம் ஷா, இலியாஸ், மமக மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம், அஷ்ரப் அலி, மாவட்ட பொருளாளர்கள் ஹூமாயூன் கபிர்காஜா மொய்தீன், தலைமை கழக நிர்வாகிகள் அப்பீஸ் கான், மண்டல நிர்வாகிகள் தல்ஹா பாபு, திருச்சி உஸ்மான், முகமது கான், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட செயலாளர்கள் மற்றும்  மாவட்ட துணை செயலாளர்கள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், மகளீர் பேரவை நிர்வாகிகள், ஜமாத்தார்கள், பொதுமக்கள், திரளாக பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தனர்.

Post a Comment

0 Comments