// NEWS UPDATE *** ''வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு...'' த.வெ.க உறுப்பினர் சேர்க்கைக்கான MY TVK செயலியை அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.! *** தவெக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள் விழா - ஆர்கே ராஜா தலைமையில் ரத்ததானம் வழங்கிய ரசிகர்கள்

தவெக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள் விழா - ஆர்கே ராஜா தலைமையில் ரத்ததானம் வழங்கிய ரசிகர்கள்

 தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்  அவர்களின் 51 வது பிறந்தநாள் விழாவை அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர் ‌

இந்த நிலையில்  திருச்சி மத்திய பேருந்து நிலையம் காவேரி இரத்த மையத்தில்  திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் விஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகி  திருச்சி ஆர்‌.கே.ராஜா  தலைமையில்  மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளரும் தண்ணீர் அமைப்பின் செயல் தலைவருமான கே.சி .நீலமேகம்  அவர்கள், தண்ணீர் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் கவிஞர் சதீஷ்குமார் அவர்கள் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார்கள்.



இதில் காவேரி இரத்த மைய அதிகாரி டாக்டர் சதீஷ்,  காவிரி இரத்த மைய பிஆர்ஓ மனோஜ், தளபதி விஜய் ரசிகர்கள் ஜீவா, 



பெரிய மிளகு பாறை சுப்பிரமணி தொட்டியம் பாரதிராஜா, சுஜன் , கார்த்திக், லால்குடி கலைவாணன் , உறையூர் சரண்ராஜ் , மஞ்சத் திடல் சிவா , மண்ணச்சநல்லூர் சுரேஷ் , கலைவாணன் , புத்தூர் நடராஜ் ,பாபு , BHEL பரத் ,சமயபுரம் ஈச்சம்பட்டி சிவா , இனாம் புதூர் தனசேகர் பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments