// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** பாவை அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் காப்பகம் திறப்பு...! கல்வியால் மட்டுமே சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியும் - திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் பேச்சு

பாவை அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் காப்பகம் திறப்பு...! கல்வியால் மட்டுமே சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியும் - திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் பேச்சு

திருச்சி  பொன்மலைப்பட்டி பகுதியில் இயங்கி வரும் பாவை அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் வருண் குமார் திறந்துவைத்தார். 

தொடர்ந்து அவர் மாணவர்களிடம் பேசுகையில் :கல்வியால் மட்டும் தான் இன்று சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்கிறோம். நான் மட்டுமல்ல என்னை போல் பலர் அரசு வேலைக்கு செல்வதால் சமூகத்திலும் குடும்பத்திலும் மரியாதை கிடைக்கிறது.


வாழ்க்கையின் முதல் பாதியில் யார் கஷ்டப்பட்டு படிக்கிறார்களோ,அவர்களின் வாழ்க்கை இரண்டாம் பாதியில் நன்றாக இருக்கும்.நானும் என் வாழ்க்கையின் முதல் பாதியில் கஷ்டப்பட்டு படித்தேன்.இன்று நல்ல நிலையில் இருக்கிறேன். கல்வி ஒன்று தான் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது.


பணம் இருந்தால் ஒருவருக்கு பலம் கிடைக்கும். பணத்தை தவறான வழியில் சம்பாதிக்க கூடாது நன்றாக படித்து பணம் சம்பாதிக்க வேண்டும்.அதே போல நல்ல நண்பர்களையும் உருவாக்கி கொள்ள வேண்டும்.சகதியில் மாட்டிக்கொண்டால் போராடி வர கூடாது மூளையை பயன்படுத்தி வெளியே வர வேண்டும். அதே போல தான் வாழ்க்கையில் உழைப்பு மற்றும் கல்வியை பயன்படுத்தி நாம் மேலே வர வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை மேலாளர்  முரளீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments