ஏகலைவன் இளைஞர் பேரவையின் தமிழகத் தலைவர் வழக்கறிஞர் வடிவேல் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் இன்று திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் உள்ள மத்திய மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு மாநிலத் தலைவர் வழக்கறிஞர் வடிவேலு அளித்த பேட்டியில்...திருச்சி மாவட்டம்,சமயபுரம் அருகே இருங்கலூர் பகுதியில் கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த கல்லூரியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குமரவேல் என்ற மாணவர் பயின்று வருகிறார். கடந்த 16ஆம் தேதி பயின்ற மாணவர் கல்லூரி கட்டணம் கட்டாததால் மன ரீதியாகவும், உளவியலாலும், சாதிய துன்புறுத்தியதால் தற்கொலை முயற்சி செய்கிறான். அந்ந மாணவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த தொடர்பாக டிஜிபி சங்கர்ஜுவல் அறிக்கை வெளியிடுகிறார் அதில் எந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் உடனடியாக விசாரிக்க வேண்டும் என உத்தரவு. இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி புகார் மனு கொடுக்கப்பட்ட நிலையில் புகார் கொடுத்த அம் மாணவனை காவல் நிலையத்தில் அழைத்து விசாரிக்காமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவரை கல்லூரிக்கு அழைத்து குற்றவாளி போல் மிரட்டி இப்புகார் மீது நடவடிக்கை தேவை இல்லை என எழுதி வாங்கி உள்ளனர்.காவல்துறையினர் கல்லூரி நிர்வாகத்திற்கு சாதகமாக, ஆதரவாகவும் நடந்து கொள்கின்றனர்.
எனவே சமயபுரம் காவல் ஆய்வாளர், கொள்ளிடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர், லால்குடி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளோம். மேலும், ஒழுங்கு நடவடிக்கை குழு ஏற்படுத்தி உரிய விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்கிறோம் என தெரிவித்துள்ளனர். ஒழுங்கு நடவடிக்கை எடுப்பாக என்று எதிர்பார்க்கிறோம் இல்லை என்றால் மாநில நிர்வாகத்தில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிப்போம் என தெரிவித்தார்.
0 Comments