திருச்சி மாவட்டத்தில் வருகிற 23, 24, 25 ஆகிய தினங்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" எழுச்சி பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். இதனை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட கிழக்கு தொகுதியில் காந்தி மார்க்கெட் அருகே உள்ள மரக்கடை எம்ஜிஆர் சிலை, மற்றும் மேற்கு தொகுதிக்குட்பட்ட புத்தூர் நால்ரோடு பகுதியில் எழுச்சிப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதனை முன்னிட்டு பொதுச் செயலாளர் பங்கேற்கும் இடங்களை ஆய்வு செய்யும் பணி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி ஆய்வு மேற்கொண்டு கழக நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.. இந்த நிகழ்ச்சியில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, கழக அமைப்பு செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் வளர்மதி, அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன்,
புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில துணை செயலாளர்கள் ஆர்.ஜோதிவானன், அரவிந்தன், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பி.ரஜினிகாந்த், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.வெங்கட்பிரபு, பகுதி கழக செயலாளர்கள் , உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments