திருச்சி உறையூர் பகுதியில் செயல்பட்டு வரும் Triple i Happy kids Play school இல் பயிலும் குழந்தைகளின் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 3 வயது குழந்தை சினாமிக 6 நிமிடங்களில் 137 பொது அறிவு கேள்விகளுக்கு பதில் அளித்து புதிய உலகசாதனை படைத்தார். தொடர்ந்து 2.5 வயது குழந்தை பூமிகா 3 நிமிடங்களில் 10 திருக்குறள் சொல்லிக் கொண்டே சதுரங்க அட்டையில் காய்களை அடுக்கி ஒரு உலக சாதனை படைத்தார்.
தொடர்ந்து 3 வயது குழந்தை வாமிகா, விவேகானந்தர் மற்றும் அப்துல்கலாம் உருவ puzzles 5 நிமிடத்தில் salve செய்து புதிய உலகசாதனை படைத்தார். தொடர்ந்து 7 வயது குழந்தை சன்மிதா 5 அடி உயர நாற்காலியில் அமர்ந்து 56 யோகாசனம் செய்து புதிய உலகசாதனை படைத்தார்.
இந்த சாதனைகளானது ஜீனியஸ் இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெகார்ட் எனும் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. உலக சாதனை படைத்த மாணவிகளுக்கு பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
0 Comments