திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக உ.வே.சாமிநாத ஐயர் தமிழ்த்துறை தமிழ் இலக்கியப் பேரவையின் தொடக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் முத்துராமகிருஷ்ணன் தலைமையேற்று தலைமை உரை வழங்கினார். தமிழக அளவில் தேசியக் கல்லூரியின் தமிழ் துறை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் திகழ்வதையும் போட்டி தேர்வுகளில் தமிழ்ப் பாடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதையும் கருத்தில் கருத்தில் கொண்டு மாணவர்கள் திறம்பட பயின்று தம் வாழ்வில் உயர்வினை அடைய வேண்டும் என்று தம் தலைமை உரையில் கருத்துரைத்தார்.
அன்றாடம் பார்க்கிற ,பழகுகிற,
வியக்கின்ற ஏதேனும் ஒன்றை தம் கற்பனையில் கலந்து கேட்போர் மனம் மகிழும் வண்ணம் எடுத்துரைத்து படைப்பிலக்கிய உலகில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தம் ஆற்றல் மிக்க சிறப்பு முறையில் விரிவாக எடுத்துரைத்தார்.
முன்னதாக தமிழ்துறை தலைவர் முனைவர் சி. காந்தி அவர்கள் சிறப்பு விருந்தினரை அவைக்கு அறிமுகப்படுத்தி வரவேற்புரை வழங்கினார். நிறைவாக இளங்கலை மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி செல்வி சரண்யா நன்றியுரை நல்கினார். இளங்கலை மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவர் செல்வன் யோகேஸ்வரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மேனாள் தமிழ்துறைத் தலைவர் மற்றும் கலைப்புல முதன்மையர் முனைவர் நா .மாணிக்கம் , தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், பிற துறைப் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட திரளானோர் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
0 Comments