தமிழ்நாடு வீர விவேகானந்தர் பேரவை சார்பில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சகல ஐஸ்வர்யம் வழங்க வலியுறுத்தி பத்தாம் ஆண்டு கோ பூஜை திருவிழா திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை நிறுவனர் ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார். கமல்ராஜ் வரவேற்றார் ரமேஷ், சித்தார்த்தன், பரமசிவம்,முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மதுரை அன்னை சாரதாம்பாள் ஆசியுரை வழங்கினார். முடிவில் மணிகண்டன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியை நாகராஜ் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தினேஷ் கண்ணன் இருந்தார்.
நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பிறகு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது மாலை 6.30 மணிக்கு கோமாதாவுடன் கோவில் ப்ரதட்சனம் நடைபெற்றது..இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள், பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்..
0 Comments