// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** திருச்சியில் அமைந்துள்ள லாட்ஜ் ஆப் ராக்,தொண்டு அறக்கட்டளையின் சார்பாக எலும்பு அடர்த்தி பரிசோதனை முகாம்

திருச்சியில் அமைந்துள்ள லாட்ஜ் ஆப் ராக்,தொண்டு அறக்கட்டளையின் சார்பாக எலும்பு அடர்த்தி பரிசோதனை முகாம்

 திருச்சியில் அமைந்துள்ள லாட்ஜ் ஆப் ராக்,தொண்டு அறக்கட்டளையின் சார்பாக எலும்பு அடர்த்தி பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த மருத்துவ முகாமில் சுமார் 120 பேர் பயனடைந்தனர்.  இந்த விழாவில் வழக்கறிஞர் திரு எம்.லட்சுமணன் அவர்கள் வரவேற்பு உரையும், திருச்சி லாட்ஜ் ஆஃப் ராக் 260 EC, தலைவர் கமலேஷ் அவர்கள், இந்த மருத்துவ முகாமை பற்றியும், எலும்பு முறிவு மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவர் பாலசுப்பிரமணியன் மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் , மருத்துவர் திரு சாம்சங் டேனியல் அவர்களும், எலும்புகளை எவ்வாறு காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைக்கும் அதைத் தொடர்ந்து இந்த அறக்கட்டளையின் கடந்த 30 வருட காலத்தின் சாதனைகளை திரு முரளிதரன் அவர்கள் எடுத்துரைத்தும், சிறப்பு விருந்தினராக மதராஸ் மாகாண தலைவர் மேத்யூ ஜோசப்  இந்த முகாமை தொடங்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார்கள். 


திருச்சி லாட்ஜ் ஆப் ராக் இன் மூத்த உறுப்பினர் சுந்தரேசன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள். மேலும் இந்த விழாவை எஸ்‌பாலசுப்பிரமணியன் வழக்கறிஞர் தொகுத்து வழங்கினார்.

இந்த விழாவில் லார்ஜ் ஆப் ராகிங் செயலாளர் மகேஷ் கண்ணா, மற்றும் உறுப்பினர்கள் தில்தீஜ்சா, பெரியண்ணன் புகழேந்தி சேட்டன் பத்ரி மார்ட்டின் பிரசன்னா மருத்துவர் கார்த்தி சன் மருத்துவர் தேவேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments