// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன தலைவர் கமலஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் அன்னதானம் வழங்கப்பட்டது

மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன தலைவர் கமலஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் அன்னதானம் வழங்கப்பட்டது

 மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன தலைவர் கமலஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் அன்னதானம் வழங்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன தலைவர், உலக நாயகன் கமலஹாசன் எம் பி பிறந்தநாள் விழா நவம்பர் 7 இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தொண்டர்கள் கமலஹாசன் பிறந்த நாளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் திருச்சி மேற்கு மாவட்டம் சார்பாக இன்று பீமநகர், 51-வது வார்டு பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. 
மநீம  மாவட்ட செயலாளர் எஸ்.பி.எஸ்.சதீஷ்குமார், நகரச் செயலாளர் பி சீனிவாசன் பீமநகர் பாதுஷா, கண்ணன், சக்திவேல், ரமேஷ் செல்வராஜ் பேக்கரி ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினர்.

Post a Comment

0 Comments