தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்றமும், திருச்சி தேசியக் கல்லூரியின் பேச்சாளர் அரங்கமும் இணைந்து நடத்திய முத்தமிழ் முகாம் என்ற முத்தமிழ்த் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் முத்துராமகிருஷ்ணன் தலைமை தாங்கி தலைமையுரை நிகழ்த்தினார்.இதில் இயற்றமிழ் பற்றி கலைமாமணி கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்களும், இசைத் தமிழ் பற்றி திருச்சிராப்பள்ளி நகைச்சுவை மன்றத்தின் தலைவர் திரு க. சிவகுருநாதன் அவர்களும், நாடகத் தமிழ் பற்றி எம். பாலசுப்ரமணியம் அவர்களும் உரையாற்றினர். தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் முனைவர் சா. நீலகண்டன் வரவேற்புரை வழங்கினார்.
தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் க. புவனேஸ்வரி நன்றியுரை வழங்கினார். பேராசிரியப் பெருமக்கள் தமிழ் ஆர்வலர்கள் மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிருபர் ரூபன்


0 Comments