திருச்சி கால்நடை வளர்ப்போம் விவசாயம் காப்போம் மண்ணையும் காப்போம் மக்களையும் காப்போம் என்ற வார்த்தையை தாரக மந்திரமாக கொண்டு தமிழக விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு கட்சி என்ற புதிய கட்சி துவங்கப்பட்டு கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து கட்சியின் நிறுவன தலைவர் சத்தியம் C. சரவணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்...தமிழக அரசு ஆடு வளர்ப்போருக்கான நலவாரியம் அமைக்க வேண்டும், வனத்துறையில் ஆடுகளை மேய்க்க பழையபடி பட்டி பாஸ் முறை அமல்படுத்த வேண்டும் ஆடு வளர்ப்போர் பல்வேற இடங்களுக்கு சென்று ஆடுகளின் மேய்த்து வருகிறார்கள், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், பனைமர கள் இறக்க அனுமதிக்க வேண்டும், 2021தேர்தல் அறிக்கையில் திமுக ஆடு வளர்ப்பு நல வாரியம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது ஆனால் இதுவரை அமைக்கவில்லை,எங்களது கட்சி தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது,
வருகிற சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் 50 தொகுதி வெற்றி தோல்வியை முடிவு செய்யும் கட்சியாக நாங்கள் உள்ளோம் வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து நாங்கள் தேர்தலில் போட்டியிட உள்ளோம்.எந்த கட்சியோடு கூட்டணி வைத்தாலும் சீமான் கட்சியுடன் வைக்க மாட்டோம் அவர் ஆடு மாடு என்று சொல்லும் போலி அரசியல்வாதி.
கிருஷ்ணரை இழிவு படுத்துகிறார் மேலும் மாட்டு கறி உண்பதை ஊக்கப்படுத்துகிறார்.வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் மேலும் விரைவில் ஆடு வளர்ப்பு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.





0 Comments