// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** திருச்சியில் உலக மண் தினத்தில் மாற்றம் அமைப்பின் சார்பில் பொதுமக்களுக்கு மரகன்றுகள் வழங்கி வீடுகளில் மரகன்றுகள் நடும் நிகழ்வு

திருச்சியில் உலக மண் தினத்தில் மாற்றம் அமைப்பின் சார்பில் பொதுமக்களுக்கு மரகன்றுகள் வழங்கி வீடுகளில் மரகன்றுகள் நடும் நிகழ்வு

திருச்சியில் மாற்றம் அமைப்பின் சார்பில் உலக மண் தினத்தில் இயற்கை கொடையான பூமியை பாதுகாக்க சுற்றுச்சூழலை பாதுகாக்க மண்வளத்தை பாதுகாக்கவும் மனிதர்கள் உயிர் வாழ சுவாசிக்க தூய்மையான காற்றை பெறவும் பறவைகள் உயிர் வாழ மரங்கள் நடவு செய்து பாதுகாப்பது மிக முக்கியம் என்பதை வலியுறுத்தும் விதத்தில் பொதுமக்களுக்கு  மரகன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 இந்த நிகழ்வில் மாற்றம் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் அமைப்பின் நிறுவனர் தலைவரும் தேசிய மாநில விருதுகள் பெற்ற நடிகரும் இயக்குனருமான ஆர். ஏ. தாமஸ் மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா விளையாட்டு பிரிவு செயலாளர் தடகள பயிற்சியாளர் சுரேஷ் பாபு இணைச் செயலாளர் குத்துச்சண்டை பயிற்சியாளர் எழில் மணி சட்ட ஆலோசகர்கள் வழக்கறிஞர் சதிஷ் ஜான் ஓவியர் ஜெயக்குமார் ஷரன் சஞ்சய் ஷேக் சல்மான்  சவிதா செல்வ பிரியா எகின் முரளி லெவின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கல்லுகுழி மன்னார்புரம் பகுதியில் பொதுமக்களுக்கு கொய்யா நெல்லி எலிம்பிச்சை உள்ளிட்ட பழ வகையிலான மரகன்றுகளை வழங்கி விழிப்புணர்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில்  மரகன்றுகள்  நடப்பட்டது

Post a Comment

0 Comments