// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான கமிஷன் தொகையை மீண்டும் வழங்க கோரி வணிக வங்கி தொடர்பாளர்கள் மனு

நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான கமிஷன் தொகையை மீண்டும் வழங்க கோரி வணிக வங்கி தொடர்பாளர்கள் மனு

 திருச்சியில் வணிக வங்கி தொடர்பாளர்களாக பணியாற்றும் 50-க்கும் யில் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து கொடுத்த மனுவில், கடந்த 15 ஆண்டுகளாக முதியோர் உதவித் தொகை திட்டம் மூலம் மக்களுக்கு கிடைக்கும் தொகையை அவர்களின் வீட்டுக்கே தேடிச்சென்று கொடுத்து வருகிறோம்.

 அரசு நலத்திட்டங்கள், மகளிர் உரிமைத் தொகை ,தமிழ்ப்புதழ்வன், புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்களுக்காக வங்கிக்கணக்கு தொடங்க மக்களுக்கும், வங்கிக்கும் பாலமாக இருந்தோம். 

இதற்காக அரசு கொடுக்கும் கமிஷனை வைத்து தான் நாங்கள் பிழைப்பு நடத்தி வந்தோம். தற்போது வழக அரசு கமிஷன் வழங்குவதை நிறுத்தி விட்டதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு கமிஷன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


Post a Comment

0 Comments