// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் 106 வயது முதியவருக்கு கண் அறுவை சிகிச்சை - தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை மருத்துவர் சாதனை

திருச்சியில் 106 வயது முதியவருக்கு கண் அறுவை சிகிச்சை - தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை மருத்துவர் சாதனை

மார்ச் மாதம் 2 வது வாரத்தில் உலக கண்ணீர் அழுத்த விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பாக கண்ணில் நீர் அழுத்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவர் அர்ச்சனா தெரேசா  அளித்த பேட்டியில்



குளுக்கோமா அதாவது கண் நீர் அழுத்த நோய் உலகளவில் மக்களிடம் சரி செய்ய முடியாத பார்வை இழப்பிற்கு மிக முக்கியமான காரணமாக விளங்குகிறது. குளுக்கோமா பார்வையை மெதுவாக குறைய செய்யும் பெரும்பாலான மக்களுக்கு அந்த நோயால் எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை எனவே, சிறிது சிறிதாக பார்வை இழப்பு ஏற்படுகிறது.




40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கிட்ட பார்வை  சர்க்கரை நோய், கண்ணில் காயம், தொடர்ச்சியாக ஸ்டீராய்டு மருந்துகள் பயன்படுத்துவோர் மற்றும் குடும்பத்தில் ரத்த வழி உறவினர்களுக்கு குளுக்கோமா நோய் இருப்பது ஆகியோர்களுக்கு குளுக்கோமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.




குளுக்கோமாவுக்கான சிகிச்சை முறைகள் கண் சொட்டு மருந்து, லேசர் மற்றும் அறுவை சிகிச்சை ஆகும். 



திருச்சி தி ஐ பவுண்டேஷனின் சாதனைகளின் சிறப்பம்சங்களில் கண் அழுத்தத்தாலும், கண்புரையாலும் பாதிக்கப்பட்ட திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதி சேர்ந்த ராஜு என்கிற 106 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் தனது பார்வையை திரும்ப பெற்றவராக தனது தேவைகளைத் தாமாகவே கவனித்து கொள்ளும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார் என தெரிவித்தார்.



Post a Comment

0 Comments