// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** ஊழல் ஆட்சி தொடர கூடாது - பிரச்சாரத்தின் போது அமமுக வேட்பாளர் ராஜசேகரன் பேச்சு.

ஊழல் ஆட்சி தொடர கூடாது - பிரச்சாரத்தின் போது அமமுக வேட்பாளர் ராஜசேகரன் பேச்சு.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருச்சி மேற்கு தொகுதியில்  அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகரன் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சுற்றுப்பணம் செய்து, பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். 

அந்த வகையில்  திருச்சி ஜெனரல் பஜார், பட்டாபிராமன் தெரு, மல்லிகைபுரம், சங்கீதபுரம், திரௌபதி அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 





அப்போது ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்ற வாக்காளர்களாகிய நீங்கள் குக்கர் சின்னத்தில் வாக்களித்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சியை தமிழகத்தில் நிறுவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.   இந்த பிரச்சாரத்தின் போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments