// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** எல்பிஜி, பெட்ரோல், டீசல் விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது - எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் வி.சி. அசோகன் தகவல்

எல்பிஜி, பெட்ரோல், டீசல் விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது - எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் வி.சி. அசோகன் தகவல்

 இந்தியன்ஆயில் கார்ப்பரேஷன் (IOCL), பாரத் பெட்ரோலியம் (BPCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL)ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் வீட்டு எல்பிஜி (LPG), பெட்ரோல், டீசல் விநியோகம் எந்த தடையும் இன்றி சீராக நடைபெற்று வருகிறது.

எல்பிஜி சிலிண்டர்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற பீதி கொள்ளாமல், வழக்கமான முறையில் மட்டும் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வர்த்தக எல்பிஜி விநியோகத்தில் மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிந்த மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் விநியோகம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இவை எளிதாக கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களுடன் இணைந்து, தொழிலாளர் குடியிருப்புகள் போன்ற இடங்களில் நேரடி விநியோகம் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முடிவாக, வீட்டு எல்பிஜி விநியோகம் முழுமையாக சீராக நடைபெற்று வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கின்றன. வர்த்தக எல்பிஜி விநியோகம் முன்னுரிமை அடிப்படையில் திறம்பட நிர்வகிக்கப்படுகிறது. மேலும், தேவையுள்ளவர்களுக்கு 5 கிலோ சிலிண்டர்கள் எளிதாக கிடைக்கின்றன என்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் வி.சி. அசோகன்  தெரிவித்தார்.

Post a Comment

0 Comments