// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** திருச்சி மேற்கு தொகுதி அமமுக வேட்பாளர் ராஜசேகரன் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி மேற்கு தொகுதி அமமுக வேட்பாளர் ராஜசேகரன் தீவிர வாக்கு சேகரிப்பு

 தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமுக வேட்பாளர் ராஜசேகரன், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

அந்தவகையில்  மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்தோப்பு சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.ஆழ்வார்த்தோப்பு பகுதியில் ஒவ்வொரு வீதியாக நடந்து சென்று பொது மக்களை சந்தித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். 



பிரச்சாரத்தின் போது அப்பகுதி மக்கள் வேட்பாளர் ராஜசேகரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு, குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Post a Comment

0 Comments